Road block students in two places near Perambalur denounce bus tariff hike
பேருந்து கட்டண உயர்வை கண்டித்து பெரம்பலூர் அருகே இரு வேறு இடங்களில் கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பாரதிதாசன் உறுப்புக் கல்லூரி மாணவர்கள் பெரம்பலூர் – துறையூர் சாலையிலும், மற்றும் புதுவேட்டக்குடி மாணவர்கள் அரியலூர் – திட்டக்குடி சாலையிலும் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஈடுபட்டனர்.
மேலும், அரசு பேருந்துகளில் தமிழக அரசின் இலவச பயண அட்டையை மாணவ, மாணவியர்கள் காண்பிக்கும் போது நடத்துனர்கள் அதனை நிராகரித்து பயணக்கட்டணம் வசூலிப்பதாகவும் குற்றம் சாட்டி இலவச பயண அட்டையை சாலையில் தூக்கி வீசி கோஷங்கள் எழுப்பினர்.
இது குறித்து தகவல் அறிந்த வருவாய் மற்றும்,காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சு நடத்தினர். இது குறித்து அரசுக்கு தெரிவிப்பதாக உறுதி அளித்தன் பேரில கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது