Road Safety Awareness Programme in Namakkal
நாமக்கல் மாவட்ட இந்திய மருத்துவ சங்கம், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிமுன்னாள் மாணவர்கள் சங்கம், நாமக்கல் அரிமா சங்கங்கள் மற்றும் நாமக்கல் மாவட்ட காவல் துறை இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு காலை நேர விழிப்புணர்வு பிரச்சாரம் நாமக்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்புறம் நடைபெற்றது.
சாலை பாதுகாப்பு காலை நேர விழிப்புணர்வு பிரச்சாரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்புறம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நாமக்கல் எம்எல்ஏ பாஸ்கர் தலைமை வகித்தார்.
இந்திய மருத்துவ சங்கத்தின் நாமக்கல் கிளை தலைவர் (தேர்வு) ரங்கநாதன், அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் டாக்டர் பிரசாத், அரிமா சங்க பிரமுகர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட எஸ்.பி அருளரசு துவக்கி துவக்கி வைத்துப் பேசியதாவது:
நமது நாட்டில் விபத்தினால் உயிரிழப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு இல்லாததே ஆகும்.முக்கியமாக செல்போனில் பேசிக் கொண்டு வாகனம் இயக்குவது, ஹெல்மெட் அணியாமல் இருப்பது, சீட்பெல்ட் அணியாமல் செல்வது, சாலை விதிகளை மதிக்காமல் செல்வது போன்றவற்றால் சாலை விபத்து உயிரிழப்பு ஏற்படுகிறது.
இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மட்டுமல்லாமல் வாகனத்தின் பின்புறம் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும்.
பள்ளி மாணவர்கள் மற்றும் குடும்பத்தில் உள்ள பெண்கள் தங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் இருசக்கர வாகனம் இயக்கும் போது ஹெல்மெட் அணிந்து செல்ல வலியுறுத்த வேண்டும் என்று கூறினார். திரளான அரசு அதிகாரிகள் மற்றும் மாணவ மாணவிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.