Rowdy hoist killing in Perambalur: 4 surrendered to police
பெரம்பலுாரில், பிரபல ரவுடியைது மது அருந்துவதற்கு அழைத்து சென்று வெட்டிக்கொலை செய்த, நான்கு வாலிபர்கள் போலீசில் சரணடைந்தனர்.
பெரம்பலுார், பழைய பேருந்து நிலையம் திருநகர் பகுதியை சேர்ந்த மார்க்கெட் பன்னீர் என்கிற பன்னீர்செல்வம் (வயது 34), பிரபல ரவுடியான இவன் மீது, இரண்டு கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், பெரம்பலுார் அங்காளம்மன் கோவில் அருகே, நேற்று இரவு 7:00 மணியளவில், பன்னீர்செல்வத்தை, மர்ம கும்பல் ஒன்று வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டது. இது குறித்து, தகவல் கிடைத்த பெரம்பலுார் போலீசார் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிந்து, குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில், இரவு 8:25 மணியளவில், துறைமங்கலம் கே.கே.,நகரை சேர்ந்தவர்களான ரத்தினம் மகன் கபிலன் (23), அதே பகுதியை சேர்ந்த வினோத் (23), தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த விக்னேஷ் (23), மற்றும் பெரம்பலூர், இலங்கை அகதிகள் முகாம் குடியிருப்பை சேர்ந்த சற்குணராஜா மகன் நகுலேஸ்வரன் (23) ஆகிய நான்கு வாலிபர்கள் பெரம்பலுார் போலீசில் சரணடைந்தனர்.
பின்னர், போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இறந்து போன ரவுடி பன்னீர்செல்வத்திற்கும், வினோத்திற்கும், கோனேரிபாளையத்தில் மது அருந்தும் போது வாக்குவாதம் ஏற்பட்டு. முன்விரோதமாறி உள்ளது.
இந்நிலையில், மது அருந்துவதற்கு அழைத்து சென்ற நான்கு பேர் கும்பல் மது அருந்திய போது தாக்கி பன்னீர் செல்வத்தை கழுத்தை அறுத்து கொடூரமாக கொன்றனர். இது போலீசார் மேலும், விசாரணை நடத்தி வருகின்றனர்.