Rs 1.5 lakh worth of goods in mini trucks, robberies plea to tampering by thieves!
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம், பாலக்கரை செல்லும் வழியில் மினிலாரி ஸ்டேண்ட் உள்ளது. அப்பகுதியில் நேற்றிரவு நின்ற லாரிகளில், பேட்டரி, டீசல் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றனர். இது குறித்து அந்த மினிலாரிகளின் உரிமையாளர்கள் 7 பேர் கொடுத்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இரவில், பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் திருட்டு பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.