Rs .1.50 Crore worth of agricultural equipment provided by the District Collector.

பெரம்பலூர் : வட்டார அளவில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் பண்ணை கருவிகளுக்கான வாடகை சேவை மையங்களை அரசு வழங்கும் மானிய உதவியுடன் வேளாண்மைப் பொறியியல் துறை அமைத்து வருகிறது.

இச்சேவை மையங்கள் மூலமாக வட்டார அளவில் விவசாயிகள் தங்களது உழவு பணிகள், பயிர;களுக்கிடையில் களையெடுத்தல், அறுவடை செய்தல், அறுவடைக்கு பின்னா; உள்ள பணிகள் ஆகியவற்றிக்கு இயந்திரங்கள் மற்றும் கருவிகளை வாடகையில் பயன்படுத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு மற்றும் மத்திய அரசு வழங்கும் 40 சதவீத மானியத்துடன் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சேவை மையத்திற்கும் ரூபாய் 25 இலட்சம் மதிப்பில் பலவகையான இயந்திரங்களை அரசு வழங்கும் ரூ.10 லட்சம் மானியத்தொகையுடன் வேளாண் இயந்திர வாடகை சேவை மையங்களை அமைத்து வருகின்றது.

நேற்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேளாண்மை பொறியியல் துறை மூலம், வேளாண்மை இயந்திரமயமாக்கல் உப இயக்கம் 2017-18 திட்டத்தின் கீழ் வேப்பந்தட்டை வட்டத்தில் 3 சேவை மையத்திற்கும், வேப்பூர், பெரம்பலூர் ஆலத்தூர் ஒன்றியங்களில் தலா ஒரு சேவை மையத்திற்கும் என மொத்தம் 6 சேவை மையங்களுக்கு ரூ.1.50 கோடி மதிப்பில் ரூ.60 இலட்சம் மானிய உதவித்தொகையுடன் கூடிய வேளாண்கருவிகளை வாடகை சேவை மையங்களுக்கு மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா வழங்கினார்.

பின்னர், அங்கிருந்த விவசாயிகளிடம் இத்திட்டத்தின் மூலம் வேளாண் இயந்திர வாடகை சேவை மையம் அமைத்திட விரும்பும் விவசாயிகள் உதவி செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தையோ அல்லது 04328-224351 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு விவசாயிகள் பயன்பெற முன் வர வேண்டும் என்று விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின்போது வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!