Rs 2.47 crore worth of marriage allowance and gold for Tali: Minister Sivasankar started.

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் வெங்கடபிரியா தலைமையில் திருமண உதவித் தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு 50 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி மற்றும் தங்கம் வழங்கி பெரம்பலூர் மாவட்டத்தில், பட்டப்படிப்பு படித்த 125 ஏழைப் பெண்களுக்கும், 10 மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படித்த 372 ஏழைப் பெண்களுக்கும் என 500 ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு ரூபாய் 1.57 கோடி உதவித் தொகையாகவும், 500 நபர்களுக்கு தலா 8 கிராம் வீதம் 4 கிலோ தங்கம் ரூபாய் 1.90 கோடி மதிப்பிலும் வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தார். மாவட்ட ஊராட்சி சேர்மன் குன்னம் சி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் அரசு வழக்கறிஞர் செந்தில்நாதன், டி.ஆர்.ஓ. அங்கையற்கண்ணி, வேப்பந்தட்டை யூனியன் சேர்மன் க.ராமலிங்கம், மாவட்ட சமூக நல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!