Rs. 6 crore road widening project: Minister Sivasankar started.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம், சிறுகன்பூர் – கொளக்காநத்தம் வரையிலான தார் சாலையை ரூ.6 கோடி மதிப்பீட்டில், அகலப்படுத்தி மேம்படுத்த நடைபெறும் பணியை அமைச்சர் சா. சி.சிவசங்கர் துவக்கி வைத்தார். ஆலத்தூர் ஒன்றிய சேர்மன் என்.கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் சேர்மன் க. முத்துகன்னு, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வ. சுப்ரமணியன், மாவட்ட கலை இலக்கிய பேரவை அமைப்பாளர் ஆ. சுந்தராசு, மாவட்ட துணை அமைப்பாளர் நா. குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள், ந. ராகவான், மணிவேல், திருமுருகன் குழந்தைவேல், பாலமுருகன், கவுன்சிலர் ரா. இளவரசு மற்றும் கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள், ஒப்பந்ததரார்கள் பலர் கலந்து கொண்டனர்.