Rs .85.69 crore project: Start with Video Conferencing
பெரம்பலூர் மாவட்டத்தில், ரூ.85.69 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை முதலமைச்சர் காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
பெரம்பலூர் : திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளை சார்ந்த ரூ.85.69 கோடி மதிப்பிலான 212 திட்டப்பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் பாடாலூரில் ரூ.36.28 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பால்பண்ணை கட்டடம், வேப்பந்தட்டையில் ரூ.7.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி, புதுக்குறிச்சியில் ரூ.7.08கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையம், பெரம்பலூர் மற்றும் குரும்பலூரில் ரூ.2.91 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவியர் விடுதி, பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் 11.97 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பகுதிகளில் புதிய பள்ளிக்கட்டிடங்கள், பெரம்பலூர் மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் ரூ.3.63கோடி மதிப்பிலான 173 பசுமை வீடுகள் மற்றும் பல்வேறு துறைசார்ந்த மேலும் பல திட்டங்கள் என ரூ.85.69 மதிப்பிலான 212 திட்டப்பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.