Samba season Robbie new insurance program for rice farmers do not trust
பெரம்பலூர் மாவட்ட ஆட்சிப் பணியாளர் க.நந்தகுமார் விடுத்துள்ள தகவல் :
பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் 2016-ஆம் ஆண்டு காரிப் பருவத்திலிருந்து பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் தற்போது நடைமுறையிலுள்ள வேளாண் பயிர்காப்பீடு திட்டத்திற்கு பதிலாக மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களிலும் அறிவிக்கை செய்யப்பட்டு 152 கிராமங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் கிராம அளவில் செயல்படுத்தப்படுத்தப்படவுள்ளது.
ராபி பருவ சம்பா நெற்பயிருக்கு காப்பீடு தொகையில் 1.5 சதவீதம் பிரிமியத்தை விவசாயிகள் செலுத்த வேண்டும். எஞ்சிய பிரிமிய தொகையை மத்திய மற்றும் மாநில அரசுகள் ஏற்கிறது. இதற்கென தமிழக அரசு நடப்பாண்டிற்கு ரூ.486.97 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. சம்பா பருவ நெற்பயிருக்கு ஒரு ஏக்கருக்கான காப்பீடு தொகை ரூ.25 ஆயிரம். இதற்கு செலுத்த வேண்டிய மொத்த பிரிமிய தொகை ரூ.3 ஆயிரத்து 725-ல் விவசாயிகள் செலுத்த வேண்டியது ரூ.375 மட்டும் ஆகும்.
மீதமுள்ள தொகையை மத்திய மற்றும் மாநில அரசுகள் செலுத்துகின்றன. பயிர் கடன் பெறும் விவசாயிகளுக்கு உரிய வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது வங்கிகள் மூலம் கடன் பெறும்போது இந்த திட்டத்தில் சேர்த்து கொள்ளப்படுவார்கள். கடன் பெறாத விவசாயிகள் தங்கள் பங்கு பிரிமிய தொகையை பூர்த்தி செய்து விண்ணப்பத்துடன் உரிய பயிர் சாகுபடி ஆவணங்களுடன் வேளாண் கூட்டுறவு சங்கங்களிலோ அல்லது வங்கிகளிலோ தொகை செலுத்தி பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம்.
இந்த பயிர் காப்பீடு திட்டத்தில் பயிர் விதைப்பு பாதிப்பு, பயிர் வளர்ச்சி நிலையில் பாதிப்பு, பேரிடர் பாதிப்பு மற்றும் அறுவடைக்கு பிந்தைய விளைபொருள் பாதிப்பு ஆகியவை கணக்கில் கொள்ளப்பட்டு பாதிப்பு ஏற்படும்போது காப்பீடு தொகை விவசாயிகளுக்கு கிடைக்கும்.
சம்பா நெற்பயிருக்கு அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் உரிய பிரிமியம் தொகையை செலுத்தும்போது, அக்டோபர் 15 லிருந்து 21 நாட்களுக்கு விதைப்பில் பாதிப்பு ஏற்பட்டால் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு ஆய்வு செய்து இழப்பீட்டுக்கான உரிய அறிக்கையை வேளாண் காப்பீடு நிறுவனத்திற்கு வழங்கும்.
அறுவடைக்குப் பிந்தைய விளைபொருள் பாதிப்பு கணக்கீட்டிற்கு பிப்ரவரி 15-ஆம் நாள் இறுதி நாளாக எடுத்துக்கொள்ளப்படும். அதிலிருந்து அதிகபட்சமாக 2 வாரங்களில்; பயிர் அறுவடை மற்றும் அறுவடைக்குபின் விளைபொருள் உலர்த்தும்போது மழையினால் ஏற்படும் பாதிப்பிற்கு இழப்பீடு தொகை வழங்கப்படும். இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த மாவட்ட அளவில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழு பயிர் சாகுபடி காலங்களில் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளும். எனவே, இத்திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் சேர்ந்து பயன் பெறலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள இணை இயக்குநர் (வேளாண்மை) அல்லது சம்மந்தப்பட்ட பகுதிகளில் உள்ள வட்டார வேளாண்மை அலவலர்களையோ நேரில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சிப் பணியாளார் தெரிவித்துள்ளார்.
முக்கிய குறிப்பு :
இந்த திட்டத்தின் கீழ் இதுவரை எந்த ஒரு விவசாயிக்கும் இழப்பீடு இதுவரை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விவசாயிகள், விவசாய சங்கத்தினருக்கும் எந்த ஒரு ஆட்சியர்களும் காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து இதுவரை இழப்பீடு பெற்றுத் தந்நதில்லை. தான் சம்பளம பெற வேண்டும் என்பதற்காக இது போன்று கலெக்டர்கள் வெளியிடும் அறிக்கைகளை உழவர்கள் நம்பவேண்டாம்.
இந்த திட்டம் மிகப் பெரிய மோசடி திட்டம் என்பது மத்திய மாநில அரசுகளே செய்வததுதான் வேதனை. அரசியல்வாதிகள் காப்பீட்டு நிறுவனங்களில் கமிசன் பெறுவதற்கு கலெக்டர்களை அரசு கையாட்காளக பயன்படுத்துகிறது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.
மேலும், காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்கவில்லை என்றால் தன்னுடைய சம்பளத்தில் ஆட்சியர் இழப்பீடு வழங்குவதாக உறுதி அளித்தால் இந்த காப்பீட்டை விவசாயிகள் செய்யலாம்.