School teacher donates Rs 50,000 to Chief Minister’s Disaster Relief Fund

பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித பட்டதாரி ஆசிரியர் பணியாற்றி வருபவர் பைரவி. தற்போது முதலமைச்சர் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்று பேரிடர் நிவாரண நிதிக்கு தனது சொந்த பணத்தை 50 ஆயிரத்தை டி.டியாக வழங்கி உள்ளார். அவரை பலர் பாராட்டி வருகின்றனர்.

இது குறித்து ஆசிரியை பைரவி தெரிவித்தாவது:

கொரோனா பேரிடர் காலத்தில் நான், என்னால் இயன்ற பல உதவிகளை சமுதாயத்திற்கும், என் பள்ளி மாணவர்களுக்கும், அரசுக்கும் தொடர்ந்து செய்து வருகிறேன். அவ்வகையில், கொரோனா தடுப்பு முன் களப் பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு தேவையான முகக்கவசம், தலைக்கவசம் மற்றும் உணவுப் பொருட்களை என் சொந்த செலவில் வேப்பந்தட்டை ஒன்றியத்தில் வழங்கினேன்.

முதன்மைக் கல்வி அலுவலர் அனுமதியுடன் கொராண தடுப்புப் பணியில் தன்னாரவலாராக செயல்பட்டு சமூக இடைவெளி, சானிடைசர் தெளித்தல் உள்ளிட்ட பணிகள் செய்துள்ளேன். பொது முடக்கம் காரணமாக பள்ளிகள் முடபட்டு ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டி என்னுடைய 10 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் ₹ஒரு லட்சம் செலவில் ஸ்மார்ட் போன் வழங்கி இன்று வரை ரீசார்ஜ செய்து வருகிறேன்.

நடப்பு ஆண்டிற்கு கொரோனா பேரிடர் நிவாரண நிதியாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரூபாய் 50,000/- க்கு வரவோலை (டி.டி) வழங்கி உள்ளேன்.
இந்நிலையில் தமிழக முதல்வரின், செய்தி அறிவிப்பில் கொரண பேரிடர் நிவாரண நிதி வழங்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளதை அறிந்து, என்னால் இயன்ற தொகையாக 50 ஆயிரத்திற்கான வங்கி (டி.டி) வரைவோலையை கொரணா நிவாரண நிதிக்காக அனுப்புகிறேன் தெரிவித்தார்.

ஆசிரியர் பணி அறப்பணி என்பது மட்டும் அல்லமல் தனது ஊதியத்தில் ஒரு பகுதியை ஆசிரியர் பைரவி சமூக முன்னேற்ற்திற்கு செலவிடுவது பாராட்டுக்குரியது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!