Secondary Guard job to ex.veterans
பெரம்பலூர் மாவட்ட ஆட்சிப் பணியாளர் க.நந்தகுமார் விடுத்துள்ள தகவல் :
மாநிலம் முழுவதும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை, ஆயுதப்படை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறை ஆகிய துறைகளில் காலியிடமாக உள்ள இரண்டாம் நிலை காவலர்பணி 15,664 பணியிடங்கள் நிரப்பப்பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதில் முன்னாள் படைவீரர்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி ஆகும். விண்ணப்பிக்க கடைசி தேதி 22.02.2017 ஆகும்.
முன்னாள் படைவீரர்கள் இராணுவப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட தேதியில் இருந்து மூன்றாண்டு நிறைவு செய்யாதவர்களாகவும், படைப்பணியில் உள்ள படைவீரர்கள் விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதிக்கு பின்னர் ஓராண்டு காலத்திற்குள் ஓய்வு பெறவுள்ளவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பித்து பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் காணலாம், என தெரிவித்துள்ளார்.