Seeking to set up Cauvery Management Board and shriek at the bank closed by the PMK
காவேரி மேலான்மை அமைக்க கோரி பா.ம.க.சார்பில் தமிழகம் முழுவதும் இன்று முழு கடை அடைப்பு மற்றும் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதனை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில், குன்னம் மற்றும் வேப்பூர் பகுதியில் பகுதியில் முழு கடையடைப்பு நடைபெற்றது. வேப்பூரில் உள்ள இந்தியன் ஓவர்சிங் வங்கியை பா.ம.க வினர் இழுத்து பூட்டினர்.
இதில் மாநில வன்னியர் சங்க துணைத் தலைவர் இராம.தங்கதுரை தலைமையில், மாநில மாணவரணி துணைத் தலைவர் பூ.பிரபு, மாவட்ட துணை செயலாளர் கோ.ராஜேந்திரன், ஒன்றியத் தலைவர் இரா.வடமலை, மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, இளைஞர் அணி செயலாளர் இளவேனில், மற்றும் பலர் ஒன்றிய ஒன்றிய செயலாளர் பார்த்திபன் ,வேப்பூர் நிர்வாகிகள்
கனல் குமார், ராஜா, வெங்கடேஷ், சங்கர், வீரமுத்து, அழகுதுரை, பாலா உட்பட சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.