seemaikaruvela tree removal work, the district’s chief judge Eyewitnesses

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை மற்றும் ஆலத்தூர் வட்டங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணிகளை பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிபதி நசீமா பானு தலைமையிலான நீதிபதிகள் நேற்று நேரில் பார்வையிட்டனர்.

வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட தழுதாழை, வெங்கலம், பாண்டகப்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகளிலும், ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட காரை, இரூர், செட்டிக்குளம் பகுதியில் உள்ள ஏரிகள் மற்றும் புறம்போக்கு நிலங்கள் என இரண்டு வட்டாரங்களிலும் சுமார் 100 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள நிலங்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் வேருடன் அகற்றும் பணிகளை நேரில் பார்வையிட்டார்.

இதனை தொடர்ந்து, வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த சீமைக்கருவேல மரங்கள் அகற்றுவது குறித்த விழிப்புணர்வு முகாமில் சீமைக்கருவேல மரங்களின் தீமை குறித்தும், அவற்றை அகற்றவேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் பொதுமக்களிடம் மாவட்ட முதன்மை நீதிபதி கலந்துரையாடினார்.

அப்போது கூடுதல் தலைமை நீதித்துறை குற்றவியல் நடுவர் சஞ்சீவி பாஸ்கர், குற்றவியல் நீதித்துறை நடுவர் சுஜாதா, மாவட்ட உரிமையியல் நீதிபதி மகேந்திரவர்மா, வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலர் வெள்ளைச்சாமி, வேப்பந்தட்டை வட்டாட்சியர் மருதைவீரன், ஆலத்தூர் வட்டாட்சியர் சீனிவாசன் உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!