Seized two bulls cart carrying sand near Perambalur; Two arrested: One escaped.
பெரம்பலூர் மாவட்டம், அத்தியூர், ஒகளூர், ஆடுதுறை, வதிஷ்டபுரம், அகரம்சீகூர் பகுதிகளில் அரசு அனுமதியின்றியும், உள்ளாட்சி துறையினர் மறைமுக ஆதரவோடும் லாரி மற்றும் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர், மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பல்வேறு புகார்கள் வந்தன.
அதன்பேரில் உதவி ஆய்வாளர் சங்கர் தலைமையில் 10க்கும் மேற்பட்ட காவல் துறையினர் நேற்று அதிகாலை லெப்பைக்குடிக்காடு, திருமாந்துறை, அத்தியூர், ஆடுதுறை பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது அத்தியூர் வெள்ளாற்றங்கரையில் அரசு அனுமதியின்றி அத்தியூரைச் சேர்ந்த முக்கன் (54), தனபால் (25), ஆகியோர் 2 மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றி வந்து கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு வந்த மங்களமேடு போலிசார் 2 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்து முக்கன், தனபால் இருவரையும் கைது செய்தனர்.
இதே போல் கீழக்குடிக்காடு பகுதியில் மணல் ஏற்றி வந்து கொண்டு இருந்த டிப்பர் லாரியை போலிசார் மடக்கி பிடித்தனர். அப்போது லாரி டிரைவர் லாரியை விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.