Selecting exam (Grade 3) for TNPSC Executive Officer

பெரம்பலூர் : தமிழ்நாடு தேர்வாணையத்தால் குரூப் VIIB-யில் அடங்கிய செயல் அலுவலர் (கிரேடு 3), குரூப் 4ஏ-ல் அடங்கிய செயல் அலுவலர் (கிரேடு ஐஏ)க்கான அலுவலருக்கான தேர்வுகள் (10.06.2017) மற்றும் (11.06.2017) ஆகிய இரு தினங்களில் பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகின்றன.

இன்று (10.06.17) நடைபெற்ற குரூப் செயல் அலுவலருக்கான ( VIIB ) தேர்வுகளை மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கரன் நேரில் பார்வையிட்டார்.

இன்று (10.06.17) நடைபெற்ற தேர்விற்கு விண்ணப்பித்த 645 நபர்களில் 311 நபர்கள் தேர்வு எழுதினர். மேலும் 334 நபர்கள் தேர்வெழுதவில்லை. மேலும் நாளை நடைபெற உள்ள செயல் அலுவலருக்கான் (கிரேடு 4) தேர்வுகளை பெரம்பலூர் மாவட்டத்தில் 880 நபர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

தேர்வு எழுத உள்ள தேர்வர்ளின் வசதிக்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தோ;வு மையத்திற்கு தேர்வர்கள் எளிதில் சென்று வர தேவையான பேருந்து வசதிகளும், தேர்வு மையத்தில் தேர்வு எழுதும் நபர்களின் வசதிக்காக ஒரு மருத்துவக் குழுவும், தீயணைப்பு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் வாகன வசதி ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

மேலும், சிறப்பான முறையில் தேர்வுகள் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக தேர்வு மையம் முழுவதும் வீடியோ கிராபர் மூலமாக தேர்வுகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றது. தேர்வு மையங்களை கண்காணிப்பதற்காக மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பாண்டியன் பறக்கும் படை அலுவலராக நியமனம் செய்யப்பட்டு, தேர்வுகள் சிறப்பான முறையில் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், தமிழ்நாடு தேர்வாணைய பிரிவு அலுவலர் எஸ்.ராஜா, வருவாய் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் சிவக்குமார் , வட்டாட்சியர் (பேரிடர் மீட்பு மேலாண்மை) மகாராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!