Seminar on Corruption Prevention week: Namakkal on behalf Nehru yuvakentira
நாமக்கல் நேரு யுவகேந்திரா சார்பில் தேசிய ஊழல் தடுப்பு வார விழா கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுஅமைச்சகத்தின் நாமக்கல் நேருயுவகேந்திரா மற்றும் நாமக்கல் கால்நடை கல்லூரி சார்பில் தேசியஊழல் தடுப்பு வார விழா கருத்தரங்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கால்நடை கல்லூரியின் முதல்வர் மோகன் தலைமை வகித்து கருத்தரங்கை துவக்கி வைத்தார். விழாவில் பாரத் யுவ சக்தி அபியான் தலைவரும் தூய்மை இந்தியா திட்ட (இளைஞர் பிரிவு )மாவட்ட தூதர் ராஜசேகர்,கல்லூரி என்எஸ்எஸ்திட்ட அலுவலர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்று ஊழல் தடுப்பு குறித்து பேசினர்.
கருத்தரங்கில் ஊழல் தடுப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது. மேலும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. முடிவில் முன்னாள் தேசிய இளைஞர் தொண்டர் விஜய்குமார் நன்றி கூறினார்.