Seminar on Modern Ideological Expressions on behalf of Tamilnadu Progressive Writers’ Artists Association in Perambalur
பெரம்பலூர்: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நவீன கருத்தியல் வெளிப்பாடு குறித்த கருத்தரங்கம் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி அரங்கில் நடந்தது.
கருத்தரங்கிற்க மாவட்ட தலைவர் முனைவர் அகவி தலைமை வகித்தார். முன்னதாக மாவட்ட செயலாளர் செல்வகுமார் வரவேற்றார்.
பாவேந்தர் இலக்கியபேரவை தலைவர் முகுந்தன், தமுஎகச சங்க கவுரத்தலைவர் டாக்டர் கருணாகரன், மாவட்ட துணை தலைவர் ராமர், கலைஇலக்கிய பெருமன்ற மாவட்ட பொருளாளர் தாஹீர்பாட்சா, சீனிவாசன் இருபாலர் கல்லூரி முதல்வர் வெற்றியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில துணை செயலாளர் களப்பிரான் கருத்தரங்கை தொடங்கிவைத்து பேசினார். மாநில தலைவர் தமிழ்செல்வன் நவீன கதை சொல்லிகள் என்ற தலைப்பிலும்,
மாநில பொதுசெயலாளர் எழுத்தாளர் வெங்கடேசன் கீழுடி வழியே நவீனமாய் ஒரு வரலாற்றுப்பார்வை என்ற தலைப்பிலும்,
மாநில துணை பொதுசெயலாளர் கருப்பு கருணா சமூக வலைத்தளங்களின் சாம்ராஜ்ஜியம் என்ற தலைப்பிலும், மாநில செயற்குழு உறுப்பினர் பிரளயன் காணொளி அலைவரிசை என்ற தலைப்பிலும் பேசினர்.
சிபிஎம் மாவட்ட நிர்வாகிகள் என்.செல்லதுரை, ஆர்.முருகேசன், முடிவில் மாவட்ட பொருளாளர் மூர்த்தி நன்றி கூறினார்.