Sengunam village the MCP; Rs .1.38 crore to 242 beneficiaries of welfare payments by collrctor infrontof MLA R.Tamilselvan

பெரம்பலூர்.ஜன.23
பெரம்பலூர் அருகே உள்ள செங்குணம் கிராமத்தில் மாவட்ட கலெக்டரின் சிறப்பு மனுநீதி நிறைவு நாள் விழா நடைபெற்றது. அதில், பெரம்பலூர் எம்.எல்.ஏ ஆர்.தமிழ்ச்செல்வன் முன்னிலையில் கலெக்டர் வே.சாந்தா, 242 பயனாளிகளுக்கு ரூ.1.38 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, பால்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை உள்ளிட்ட பல துறைகள் சார்ந்த திட்டங்கள் குறித்தும், இத்திட்டங்கள் மூலமாக பொதுமக்கள் பயன்பெறுவதற்குண்டான வழிமுறைகள் குறித்தும் தொடர்புடைய அலுவர்களால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ ஆர்.தமிழ்ச்செல்வன் பேசியதாவது:

பொதுமக்களின் நலவாழ்விற்காகவும், பொருளாதார மேம்பாட்டிற்காகவும் தமிழக அரசு பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இத்திட்டங்களின் மூலமாக தகுதியுடைய அனைவரும் பயன்பெற வேண்டும் என்ற அடிப்படையில், தமிழக முதலமைச்சரால், தமிழகம் முழுவதும் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டு, அதற்கான நலத்திட்ட உதவிகளும் பயனாளிகளுக்க வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விவசாயிகளின் மேம்பாட்டில் மிகுந்த அக்கறை கொண்ட மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழர்கள் அனைவரும் சிறப்பான முறையில் குடுமப்த்தினருடன் மகிழ்ச்சியான முறையில் கொண்டாட ரூ.1000-த்துடன் கூடிய சிறப்பு பொங்கல் தொகுப்பையும் வழங்கினார்கள். எனவே தமிழக முதலமைச்சரால் செயல்படுத்தப்படும் மக்கள் நலத்திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும், என பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கலெக்டர் வே.சாந்தா பேசியதாவது:

தமிழக முதலமைச்சர், மக்களின் தேவைகளறிந்து பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள்.மேலும் இது போன்ற மக்கள் தொடர்பு முகாம்களை கிராமங்கள் தோறும் நடத்தி மக்களின் தேவைகளை நிறைவேற்றிடவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாற்றுத் திறனாளிகளின் அளவு 2 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டிய நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் அந்த அளவு சற்று கூடுதலாக உள்ளது. மேலும் மத்திய அரசு நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் பற்றிய புள்ளி விவரங்களை சேகரிக்கவும். அரசின் திட்டங்கள் அவர்களுக்கு எளிதில் கொண்டு செல்லும் நோக்கத்திலும், மாற்றத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் திட்டம் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டு, நடைமுறையில் உள்ளது.

மத்திய அரசால் இயற்றப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தில் அறிவிக்கப்பட்ட 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்த தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இந்த அட்டையைப் பெறுவதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பெறப்பட்டு பதிவு செய்யப்படுகிறது. மேலும், இதற்கான சிறப்பு முகாம்கள் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. எனவே இப்பகுதியில் எவரேனும் மாற்றுத்திறனுடையோர் இருப்பின் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை பெற்று அரசின் திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும், என பேசினார்.

இந்நிகழ்ச்சியில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குதல் திட்டத்தின் கீழ் 85 பயனாளிகளுக்கு ரூ.47,30,000- மதிப்பீட்டிலான இலவச வீட்டு மனை பட்டாக்களும், 9 நபர்களுக்கு நத்தம் வீட்டுமனைப் பட்டா மாற்றத்திற்கான ஆணைகளையும், 28 நபர்களுக்கு நத்தம் பட்டா நகல்கலையும், இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.24,000- மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளும், இந்திராகாந்தி தேசிய விதவை உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 6 பயனாளிகளுக்கு ரூ.72,000- மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளும், விதவை உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு 48,000- மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளும், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு ரூ.12,000- மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவியும், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 34 பயனாளிகளுக்கு ரூ.43,30,000- மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளும்,

வேளாண்மைத் துறை மூலம் 18 பயனாளிகளுக்கு ரூ.5,98,000- மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளும், தோட்டக்கலைத்துறை மூலம் 11 பயனாளிகளுக்கு ரூ.9,62,500- மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் மூலம் 3 பயனாளிகளுக்கு ரூ.18,120- நலத்திட்ட உதவிகளும், கால்நடை பராமரிப்புத்துறை மூலம் விலையில்லா வெள்ளாடு திட்டத்தின் கீழ் 34 பயனாளிகளுக்கு ரூ.4,33,500- மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளும், தாட்கோ மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.12,51,858- மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளும், பால்வளத்துறை மூலம் 3 பயனாளிகளுக்கு ரூ.1,500- மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளும், வேளாண்மை பொறியியல் துறை மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.13,57,278- மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளும் என மொத்தம் 242 பயனாளிகளுக்கு ரூ.1,38,38,756- மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை பெரம்பலூர் எம்.எல்.ஏ ஆர்.தமிழ்ச்செல்வன் முன்னிலையில் கலெக்டர் வே.சாந்தா வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தெய்வநாயகி, வருவாய் கோட்டாட்சியர் சுப்பையா, வோளாண்மைத்துறை இணை இயக்குநர் கணேசன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.மதனகோபால், துணை இயக்குநர் (சுகாதாரப்பனிகள்) மரு.கீதாராணி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சக்திவேல், வட்டாட்சியர்கள் பாரதிவளவன், செல்வராஜ், செங்குணம் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!