Sewing machine for widows, destitute women abandoned by their husbands: Perambalur Collector Information!

model

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் 2022-2023-ஆம் நிதியாண்டிற்கான, சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ், கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட, ஆதரவற்றோர் மற்றும் நலிவுற்ற மகளிர்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட உள்ளது.

விளம்பரம்:

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள விண்ணப்பதாரர்கள் வருவாய் வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட குடும்ப ஆண்டு வருமான சான்று, (ரூ. 72,000/-க்குள் இருத்தல் வேண்டும்) இருப்பிட சான்று, விதவைச் சான்று, சாதி சான்று, குடும்ப அட்டை நகல், இரண்டு பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படங்கள், தையல் சான்று, முன்னுரிமை கோருவதற்கான சான்றுகள் இருப்பின் அதன் நகல் ஆகியவற்றுடன் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் என்ற முகவரிக்கு 31.10.2022-க்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04328 – 296209 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

விளம்பரம்:

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!