Sexual abuse in the workplace! Women can complain !! Perambalur Collector
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல்
பெரம்பலூர் மாவட்ட அளவில், பணிபுரியும் இடங்களில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் பெண்களின் புகார் மீது விசாரணை மேற்கொண்டு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை சார்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மகளிர் திட்ட அலுவலர், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர், மாவட்ட சமூகநல அலுவலர், ஒரு வழக்கறிஞர் உள்ளிட்ட 10 உறுப்பினர்கள் அடங்கிய விசாரணைக்குழு (Local Complaint Committee) அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
எனவே, பணிபுரியும் இடங்களில் பாலியல் வன் கொடுமை பாதிப்புக்கு உள்ளாகும் பெண்கள் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தரைத்தளத்தில் இயங்கி வரும் மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 04328-224122 என்ற தொலைபேசி எண்ணின் மூலமாகவோ தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம், என தெரிவித்துள்ளார்.