Shirdi Sai Baba Sathapatthi Festival started in Namakkal on 18th
நாமக்கல்லில் ஷீரடி சாய்பாபா சதாப்தி விழா வரும் 18ம் தேதி துவங்குகிறது.
ஷீரடி சாய்பாபா 1918ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி விஜயதசமி அன்று மகாசமாதி அடைந்தார். அன்றிலிருந்து இன்று வரை ஒவ்வொரு வருடமும் விஜயதசமி அன்று ஷீரடி சாய் பாபாவின் புண்ணிய திதி அனுஷ்டிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு நாமக்கல் திருச்சி ரோட்டில் இருந்து வரகுரம்பட்டி செல்லும் வழியில் ஸ்ரீசாய் தத்தா பிருந்தாவன் பிரார்த்தனை ஸ்தலம் மற்றும் தியான மண்டபத்தில் வரும் 18ம் தேதி வியாழக்கிழமை ஷீரடி சாய் பாபாவின் சதாப்தி விழா துவங்குகிறது.
விழாவினை முன்னிட்டு 18ம் தேதி வியாழக்கிழமை காலை 6.30 மணிக்கு காகட ஆரத்தியும், 7.15 மணிக்கு தரிசனமும் நடைபெறுகிறது. 8 மணி முதல் 10 மணி வரை சிறப்பு அபிஷேகம் அலங்காரம், ஷோடச உபசாரம், 10 மணிக்கு நாமஸ்மரணம் நடைபெறுகிறது.
மதியம் 12 மணிக்கு ஆர்த்தியும், ஒரு மணிக்கு தரிசனமும், 2 மணி மற்றும் 4 மணிக்கு நாமஸ்மரணம் நடைபெறுகிறது. 6மணிக்கு தூப் ஆரத்தியும், 7 மணிக்கு சிறப்பு சாவடி உற்சவமும், 8.30 மணிக்கு ஷேஜ் ஆரத்தியும் நடைபெறுகிறது.
19ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு காகட ஆரத்தியும், 7.15 மணிக்கு தரிசனமும் நடைபெறுகிறது. 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், விஷ்ணு சகஸ்ர நாமம் மற்றும் ஹனுமன் சாலீஸா பாராயணமும் நடைபெறுகிறது. 10 மணிக்கு நாமஸ்கரணம் நடைபெறுகிறது. 12 மணிக்கு மதியம் ஆர்த்தியும், ஒரு மணிக்கு தரிசனமும், 2 மணி ஆத்ம ஜோதி ஏற்றுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 6மணிக்கு தூப் ஆரத்தியும், 7 மணிக்கு பரத நாட்டியம் மற்றும் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 8.30 மணிக்கு ஷேஜ் ஆரத்தி நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சாய் ஹர்ஷா நான் பிராபிடபுள் டிரஸ்ட் நிர்வாகத்தினர் மற்றும் உறுப்பினர்கள் செய்துவருகின்றனர்.