Siruvachur Almighty Vidyalaya School’s 2nd Annual Festival
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில் ஆல்மைட்டி வித்யாலாயா (சிபிஎஸ்இ) பள்ளியின் 2ஆம் ஆண்டுவிழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் ராம்குமார் தலைமை வகித்தார்.
பள்ளியின் முதல்வர் சிவகாமி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் க.முனுசாமி, பட்டிமன்ற நடுவர் நந்தலாலா மற்றும் பொதுப் பணித்துறை ஓய்வு வி.சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் நந்தலாலா சிறப்புரையாற்றும் போது குழந்தைகளின் ஆற்றல் மாறுபட்டது கண்ணும் கையும் ஒரே நேரத்தில் இயங்கும் போது சிந்தணை பிறக்கிறது. அதை பெற்றோர்களும் ஆசிரியர்களும் கண்டறிந்து நல்ல நோக்கத்தினை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும்.
இன்றைய நவீன மயத்தில் செல்போனால் இளைஞர்கள் கெடுகிறார்கள் என்று குறை சொன்ன நேரத்தில் அந்த செல்போனால் தான் மெரினாவில் 12 லட்சம் பேர் கூடி ஒரு நல்ல போராட்டத்திற்கு வெற்றி தேடினார்கள் எனவே அடிப்படையிலேயே குழந்தைகளின் நோக்கம் நல்ல விதத்தில் அமைய பள்ளிகளிலும் பெற்றோரிடத்திலும் தான் உள்ளது என்று கூறினார். பள்ளியில் கடந்த நான்காம் தேதி நடைபெற்ற திறனறித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்ற பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியைகள் மற்றும் பங்குதாரர்கள் செய்திருந்தனர்.