southwest monsoon blows in the wind speed increase, motorists stutter at perambalur
பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது தென் மேற்கு பருவ காற்று தீவிரமடைந்துள்ளது. மேலும், ஆடிக்காற்றில் அம்மியும் நகரும் என்பர்கள். அது போலவே காற்று பலமாக வீசி வருகிறது.
காற்று, மணிக்கு சுமார் 17 கி.மீ வேகத்தில் வீசி வருகிறது. இதனால் கிழக்கில் இருந்து மேற்காகவோ, அல்லது வடக்கில் இருந்து தெற்கு நோக்கியோ பயணிக்கும் இரு சக்கர வாகனங்களை காற்று கடுமையாக எதிர்க்கிறது. இந்த எதிர்ப்பால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வாகனத்தை இயக்கி வருகின்றனர். அவ்வப்போது புழுதியையும் கிளப்பிவிடுகிறது
காற்றின் ஈரப்பதம் 40 சதவீதமாக உள்ளது. சூரிய வெப்பம் அதிக பட்சமாக 96 டிகிரியும், குறைந்த பட்சமாக 79 டிகிரி பாரன்ஹீட் வெப்பமாக இன்று இருக்கிறது. மழை அல்லது தூறல் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது.