Special Awareness Medical Camps for Hemorrhoids on behalf of Veterinary Husbandry Department: Perambalur Collector Information

Model Photo

பெரம்பலூர் கலெக்டர் வெங்டப்பிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் நாளை 11.12.2020 முதல் 31.12.2020 வரை சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடத்திட 40 கால்நடை மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பிற துறைகளுடன் இணைந்து திசையன் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில் கால்நடைகளில் மாட்டம்மை அறிகுறிகளான தோல் புண்கள், கழுத்தில் அல்லது காலில் வீக்கம் மற்றும் காய்ச்சல் தென்பட்டால் உரிய சிகிச்சை வழங்கப்பட உள்ளது.

மாடுகளை தாக்கும் மாட்டம்மை எனப்படும் நோயினை கட்டுப்படுத்திட மத்திய, மாநில அரசுகள் வழங்கியுள்ள ஆலோசனைகளை பின்பற்றிட வேண்டும். ஆரோக்கியமான மாடுகளில் இருந்து நோய்வாய்ப்பட்ட – பாதிக்கப்பட்ட மாடுகளை உடனடியாக தனிமைப்படுத்துதல். கொசுக்கள், ஈக்கள் உண்ணி போன்ற கடிக்கும் பூச்சிகள் மாட்டம்மை நச்சுயிரியை (வைரஸ்) பரப்பும் திசையன்களாக (arthropod vectors) செயல்படுகின்றன.

எனவே பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாட்டம்மை வைரசை பரப்பும் உண்ணி, கொசுபோன்ற திசையன்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். தகுந்த உயிரி பாதுகாப்பு நடவடிக்கைகள் (Bio-security) மற்றும் சரியான சுகாதார நடவடிக்கைகள் கண்டிப்பாக மேற்கொள்ளப்பட வேண்டும். அதாவது மாட்டுக் கொட்டகைகளில் – பண்ணையில் பொருத்தமான இரசாயனங்கள் – கிருமிநாசினிகள் தெளிக்கப்படவேண்டும்.

பாதிக்கப்படாத மாடுகளில் பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்துமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மாட்டம்மை நோய் இருப்பதாக சந்தேகிக்கப்படும் எந்த மாடுகளையும், நோயற்ற, நோய் பாதிக்கப்படாத பகுதிகளில் அல்லது பண்ணைக்குள் அறிமுகப்படுத்தக் கூடாது. பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து நோயற்ற, நோய் பாதிக்கப்படாத பகுதிகளுக்கு மாடுகளின் நடமாட்டத்தை முற்றிலும் தவிர்த்திடவேண்டும். நோயுற்ற விகிதம் சுமார் 20-10 சதவீத மற்றும் இறப்பு விகிதம் 0.5-1 சதவீதம் என்றாலும், அங்கே பல வாரங்களுக்கு பாதிக்கப்பட்ட பசுக்களில் பால் உற்பத்தி குறையும் என்பதால் நோய் பரவுதலை தடுக்க மேற்கண்ட நடவடிக்கைகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்படவேண்டும். தங்கள் கால்நடைகள் கட்டும் இடங்களில் மாலை 06.00 மணியளவில் நொச்சி இலை சருகுகள் வேப்பிலை சருகுகளை கொண்டு புகைப்பிடித்தால் கால்நடைகளை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!