Special camp for online registration to take sand in quarries at Perambalur district பெரம்பலூர் மாவட்ட அரசு குவாரிகளில் மணல் எடுக்கும் வாகனத்தின் பதிவு எண்னை ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளவதற்கான சிறப்பு முகாமை வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன் இன்று பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத் துறை வளாகத்தில் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கோட்டாசியர் கதிரேசன் தெரிவித்ததாவது:

மணல் லாரி உரிமையாளர்களுக்கு அரசு மணல் குவாரியில் இருந்து தங்களது லாரிகள் மூலம் விரைவாக மணல் எடுத்துச் செல்வதற்கு தங்களது வாகனத்தின் பதிவு எண்னை ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ள, பெரம்பலூர் மாவட்ட பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை வளாகத்தில் இன்று முதல் வரும் ஆக. 11. ம் தேதி வரை சிறப்பு பதிவு முகாம் வருவாய் துறை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் ஒத்துழைப்புடன் நடைபெற்று வருகிறது.

இம்முகாமில் லாரி உரிமையாளர்கள் தங்களது வாகனத்தின் அனைத்து ஆவணங்களையும் அசலாக நேரில் கொண்டுவந்து ஆன்லைன் மூலம் பதிவு செய்து பயன் அடைய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இம்முகாமில் உதவி செயற்பொறியாளர் .டி.என்.பிரபாகரன், வட்டார போக்கு வரத்து அலுவலர் அறிவழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!