Special Summary Revision of Electoral Roll Camp Discussion Namakkal Sub-Collector Kranti Kumar Pati reviewed the record straight
நாமக்கல்: வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாமை நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்தி குமார் பதி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டத்தில் இந்திய தேர்தல் கமிஷன் உத்திரவின்படி 1.01.2019ஐ தகுதி நாளாகக் கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள் கடந்த 1ம் தேதி முதல் தொடங் வரும் செப்டம்பர் மாதம் 31ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணிகளின் போது 18 வயது பூர்த்தியடைந்த, அதாவது 31.12.2000 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம்-6 விண்ணப்பித்தினை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன், சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலகங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்கள் மற்றும் அருகில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் அளிக்க வேண்டும்.
மேலும் வாக்காளர்களின் தேவைக்கேற்ப பெயர் நீக்கம் செய்வதற்கான படிவம்-7, திருத்தம் செய்வதற்கான படிவம்-8 மற்றும் ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் இடமாற்றம் படிவம் 8ஏ ஆகியவற்றினையும் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணியை முன்னிட்டு 4 ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தவும் இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதனை முன்னிட்டு நேற்று நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள 661 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.
இந்த முகாமில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் வாக்குச்சாவடி நிலைஅலுவலர்கள் மற்றும் வாக்குச் சாவடி மைய அலுவலர்கள் உரிய வாக்காளர் பட்டியல் விபரங்கள் மற்றும் போதுமான படிவங்களுடன் மையங்களில் இருந்து விண்ணப்பங்களை பெற உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நாமக்கல் நகராட்சி, நல்லிபாளையம் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கோட்டை நகரவை உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாமினை நாமக்கல் சப்- கலெக்டர் கிராந்தி குமார் பதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த முகாமில் வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டிருந்ததையும், பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றத்திற்கான படிவங்கள் தேவையான அளவு உள்ளதா என்றும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் திருத்தப்பணிகள் மேற்கொள்வதற்காக வாக்குச்சாவடி மையத்திற்கு வந்திருந்த விண்ணப்பதாரர்களின் படிவங்களை பார்வையிட்டும் ஆய்வு செய்தார். இன்றைய முகாமினை தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாமானது வரும் அக்டோபர் 7ம் தேதி மற்றும் 14ம் தேதிஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும்.
எனவே இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நாமக்கல் மாவட்டத்தில் தகுதி வாய்ந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என சப்-கலெக்டர் கிராந்தி குமார் பதி தெரிவித்தார். இந்த ஆய்வின்போது நாமக்கல் தாசில்தார் செந்தில்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.