Sri Ramakrishna Children’s Welfare Home Opened by Minister S.S. Sivashankar

கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் குழந்தைகளை காக்கும் வகையில், தமிழக அரசின் ஒப்புதலோடு பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் அருகே உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி சார்பில், ஸ்ரீ ராமகிருஷ்ணா குழந்தைகள் நல இல்லத்தை, தமிழக பிற்படுத்தபட்டோர் மற்றும் சீர்மரபினர் நலதுறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசஙகர் ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கேற்றியும் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டால் அவர்களை காக்கும் விதத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த குழந்தைகள் நல மையத்தை துவக்கி வைப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இதனை ஏற்படுத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவன தாளாளர் சிவசுப்பிரமணியன் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட அவர், தொற்று ஏற்பட்ட குழந்தைகளுக்கு அனைத்து சிகிச்சையும் சிறப்பான வசதியுடன் கூடிய 20 அறைகளில் 50 படுக்கைகள் கொண்ட மையம் கொடுக்கப்பட்டிருக்கிறது இதனை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சி. அருள் செல்வி, பெரம்பலூர் எம்.எல்.ஏ ம.பிரபாகரன், மாவட்ட ஊராட்சி சேர்மன் குன்னம் சி. இராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என், ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ ம .இராஜ்குமார், ஒன்றிய செயலாளர்கள் எஸ்.அண்ணாதுரை, தி.மதியழகன், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் க.ராமலிங்கம், மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் பாரி (எ) அப்துல் பாரூக், ராமகிருஷ்ணா கல்வி நிறுவன செயலாளர் விவேகானந்தன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!