Sri Renuga Parameswari Temple Consecrated near Perambalur

பெரம்பலூரை அடுத்த எசனை கீழக்கரையில் (கீரனூர் நத்தம்) பெரம்பலூர் -ஆத்தூர் பிரதான சாலையில் அமைந்துள்ள பலநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீரேணுகாபரமேஸ்வரி(அம்சா) எனும் எல்லையம்மன் திருக்கோவிலில் ஸ்ரீமகாகணபதி, ஜமதக்னி முனிவர், பரசுராமர், மாதங்கி, மாரியம்மன், பாப்பாத்திஅம்மன், நாகதேவர்கள், பெரியாண்டவர், மதுரைவீரன், கட்டியக்காரன், கருப்பண்ணசாமி ஆகிய பரிவார தெய்வங்கள் உள்ளன.

ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று சிறப்பாக பூஜைகள் நடத்தப்படும் இக்கோவில் பல லட்சங்கள் செலவில் புணரமைக்கப்பட்டு, மகா கும்பாபிசேகம் இன்று காலை 9.45 மணிக்கு தொடங்கி நடந்தது.

இன்று காலை 6 மணிக்கு ரட்சா பந்தனம் மற்றும் 4-வது கால யாகசாலை பூஜையும் நடக்கிறது. காலை 9 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம்புறப்பாடும், கோவில் விமானகோபுர மகா கும்பாபிசேகமும், காலை 10 மணிக்கு மூலஸ்தானம் ஸ்ரீரேணுகாபரமேஸ்வரி அம்பாள், பரிவாரதெய்வங்களுக்கு மகாகும்பாபிசேகம் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு ரேணுகாபரமேஸ்வரி அம்பாளுக்கு மகாஆபிசேகம், கோபூஜையும், தசதரிசனமும் நடந்தது. இன்று இரவு எசனை சிவன்கோவிலில் இருந்து புறப்பட்டு திருவீதி உலா நடக்கிறது.

யாகசாலை பூஜைகளை சந்திரசேகர குருக்கள், எசனை ஞானாம்பிகை சமேத காளத்தீஸ்வரர் கோவில் அர்ச்சகர் யோகேஸ்வர சிவம் மற்றும் குழுவினர் நடத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!