sslc-2 golden-gates-school-state2nd sslc-govt-school10ம்வகுப்பு பொதுத் தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் 96.52 விழுக்காடு தேர்ச்சி பெற்று மாநில அளவில் 9 வது இடத்தை பெற்றுள்ளது. சென்ற ஆண்டு பெரம்பலூர் மாவட்டம் 97.25 விழுக்காடு பெற்று மாநில அளவில் 5 இடத்தை பெற்றிருந்தது. மாவட்ட அளவில் அரசுப்பள்ளிகளை சேர்ந்து மாணவ, மாணவிகள் 93.01 விழுக்காடு தேர்ச்சிப் பெற்றுள்ளனர்இ

நடைபெற்று முடிந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 5,047 மாணவர்களும், 4,530 மாணவிகளும் என மொத்தம் 9,577 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 4,841 மாணவர்களும், 4,403 மாணவிகளும் என மொத்தம் 9,244 மாணவ, மாணவிகள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இது 96.52 விழுக்காடு தேர்ச்சி ஆகும்.

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி டி.ஹேமலதா, கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் செல்வகணேஷ், மாணவி சௌந்தர்யா ஆகியோர் 498 மதிப்பெண்களுடன் மாநில அளவில் இரண்டாமிடம் மற்றும் மாவட்ட அளவில் முதலிடத்தையும் பிடித்தனர்.

பெரம்பலூர் மாவட்ட அளவில் 4 நபர்கள் 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாமிடம் மற்றும் மாவட்ட அளவில் இரண்டாமிடத்தையும், 496 மதிப்பெண்களுடன் 10 மாணவ, மாணவிகள் பெரம்பலூர் மாவட்ட அளவில் மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.

நூற்றுக்கு நூறு :

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆங்கில பாடத்தில் 1 நபரும், கணிதத்தில் 243 நபர்களும், அறிவியல் பாடத்தில் 423 நபர்களும், சமூக அறிவியல் பாடத்தில் 1,050 நபர்களும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

கீழப்பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சரண்யா 491 மதிப்பெண்களுடன் அரசுப்பள்ளிகள் தர வரிசையில் மாவட்ட அளவில் முதலிடத்தையும், 487 மதிப்பெண்களுடன் 3 மாணவ, மாணவிகள் அரசுப்பள்ளிகள் தர வரிசையில் மாவட்ட அளவில் இரண்டாமிடத்தையும், 486 மதிப்பெண்களுடன் 2 மாணவ, மாணவிகள் அரசுப்பள்ளிகள் தர வரிசையில் மாவட்ட அளவில் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டதிலுள்ள 76 அரசுப்பள்ளிகளில் 30 அரசுப்பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகளும், 9 ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் 3 ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகளும், அனைவரும் தேர்வுப்பெற்று நூறு சதவீத தேர்ச்சி விழுக்காடு பெற்றுள்ளனர். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒட்டுமொத்தமாக 136 பள்ளிகளில் 74 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்ச்சிப்பெற்று 100 சதவீத தேர்ச்சி விழுக்காடு அடைந்துள்ளது.

மாநில அளவிலும், மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மாவட்ட ஆட்சியர் நந்தகுமாரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மாணவ மாணவிகளை சந்தித்த மாவட்ட ஆட்சியர் கல்வியில் மேலும் பல சாதனைகள் படைத்து சமுதாயத்தில் நல்ல மனிதர்களாக உருவாக வாழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் சோனல்சந்திரா, மாவட்ட முதன்மை கல்வி அலவலர் முனுசாமி, மாவட்ட கல்வி அலுவலர் வெங்கடாஜலபதி மற்றும் மாணவ மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!