State level athletics; Perambalur collector praises gold and silver medalist!
பள்ளி கல்வித்துறை சார்பாக, திருவண்ணாமலையில் நடைபெற்ற மாநில அளவிலான தடகள போட்டிகளில், சுமார் 2,750 மாணவியர்களும் 2,750 மாணவர்களும் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் 70 மாணவிகளும், 71 மாணவர்களும் கலந்து கொண்டு போட்டியில் பங்கு பெற்றனர்.
இதில், 14 வயது பிரிவில் 600 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 8ம் வகுப்பு மாணவி சாத்விகா 600 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் முதலிடம் பெற்று தங்க பதக்கமும், 400 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் 2 இடம் பெற்று வெள்ளி பதக்கம் பெற்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவியை , கலெக்டர் வெங்கடபிரியா பாராட்டி வாழ்த்தினார் அப்போது, கல்வித்துறை அதிகாரிகள், உடற்கல்வி ஆய்வாளர்கள், தடகள பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.