State level Kho-kho games are held in Perambalur
பெரம்பலூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஜயன் விடுத்துள்ளள தகவல் :
இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் சார்பாக பெரம்பலூர் மாவட்ட பள்ளிக் கல்விதுறை சார்பாக தமிழ்நாடு மாநில அளவிலான கோ-கோ தெரிவு போட்டிகள் வரும் செப்.10 அன்று பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரில் உள்ள ஸ்ரீஅம்பாள்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.
இப்போட்டியானது 19 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு மட்டும் நடத்தப்பட உள்ளது. இப்போட்டிகளில், தமிழ்நாட்டில் உள்ள 8 மண்டலங்களைச் சார்ந்த மாணவியர்கள் பங்குபெற உள்ளனர்.
ஏற்கனவே மண்டலப் போட்டிகளில் பங்குப் பெற்று தகுதி பெற்ற மாணவியர்கள் மட்டுமே இப்போட்டிகளில் பங்குபெற இயலும்.
மேலும், இப்போட்டிகளில் தெரிவு பெறும் மாணவியர்கள் நவம்பர் முதல் வாரத்தில் நடைபெற உள்ள பயிற்சி முகாமில் பங்கு பெற்று நவம்பர் இரண்டாம் வாரத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கு பெற உள்ளனர் என தெரிவித்துள்ளார்.