struggle at the local Panchayat against plant to protest near in perambalur

பெரம்பலூர் மாவட்டம், அகரம்சீகூர் ஊராட்சியில் சரியான சாலை வசதி கோரி பொதுமக்கள் நாற்று நடும் போராட்டம் நடத்தினார்கள்.

அகரம்சீகூர் ஊராட்சியில் அரியலூர் மெயின் ரோட்டில் உள்ள வடக்கு வீதியின் சாலை சேறும், சகதியுமாய் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த சேற்றிலே நடந்து செல்வதால் கால்களின் புண்கள் உண்டாகி மிகவும் அவதிப்படுகின்றனர்.

இந்த தெருவில் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். மேலும் இந்த தெரு வழியாகதான் அருகில் உள்ள வயல்களுக்கு விவசாயிகள் செல்ல வேண்டும். சிறு மழை பெய்தாலே தெரு முழுவதும் சேறும், சகதியுமாய் ஆகிவிடுகிறது. தண்ணீர் தேங்கி குளம் போல் நிற்பதால் புழுக்கள் உற்பத்தியாகி கொசுக்கள் அதிக அளவில் உள்ளன.

இந்த சாலையை சீரமைத்து தர கோரி வேப்பூர் வட்டார வளர்ச்சி அதிகாரி மற்றும் குன்னம் தாசில்தாரிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே, வடக்கு வீதி பொதுமக்கள் அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டும், ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் ஊர் பெரியவர் ராஜேந்திரன் தலைமையில் நாற்று நடும் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் குமார், சக்தி, அன்பழகன் தமிழரசி, சசிகலா, நிலா, அமுதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!