Students and Government Employees gave land of lime water to the people: Collector.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர்; ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காரை அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்ற மருத்துவ முகாமில் துப்புரவு காவலர்கள், ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் சாந்தா இம்முகாமினை பார்வையிட்டு பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கினார். அதனைத்தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சியர் நட்டார்.
பின்னர் ஆலத்தூர் வட்டாட்சியர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள ஆலத்தூர் தொழில்நுட்பக்கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும், வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கினார்கள்.
அப்போது அப்பகுதி வருவாய் மற்றும் வளர்ச்சித்துறை அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோர் அங்கிருந்தனர்.