Students and school administration ceased to pay the fee in the sun light

பெரம்பலூர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி நிர்வாகம் ஒன்று பள்ளி கட்டணம் செலுத்த பெற்றோர்கள் காலம் தாழ்த்தியதால் மாணவர்களை வெயிலில் நிற்க வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

5 ஆயிரத்திற்கு குறைவாக கட்டணம் பாக்கி வைத்துள்ள மாணவர்களின் பெற்றோர்களிடம் கட்டணத்தை கேட்காமல் , அவர்களை கண்டிக்கும் வகையில் பள்ளிக்கு வருகை புரிந்த பத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை நிர்வாகம், ◌ாபாக்கித் தொகையை காரணம் காட்டி வகுப்பறைக்கு வெயியே வெயிலில் நேற்று நிற்க வைத்தது. இதில் மாணவர்கள் மயக்க நிலைக்கு தள்ளப்பட்டனர்.

குழந்தைகள் தங்கள் பெற்றோர்களிடம் இது குறித்து கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் நொந்து போயினார். படிக்காதவர்கள் தவறிழைக்கலாம் பாடசாலையை நடத்துபவர்கள் தவிறிழைக்கலாமா என்று வேதனை அடைந்தனர். இது குறித்து தட்டி கேட்டால் டி.சி கொடுத்துவிட்டால் என்ன செய்வது என புலம்பி கொண்டு உள்ளனர்.

இது போன்ற மனிதாபிமாமற்ற பள்ளிகளில் பயிலும் பத்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் மனநிலை எப்படி மாறியிருக்கும் என்பதை கல்வி தந்தைகள் (வியாபாரிகள்) உணர வேண்டும். பணம் ஒன்றே குறிக்கோளாக கொண்ட பள்ளிகள் உயர்ந்தது இல்லை. மேலும், பெற்றோர்கள் மனநிலையையும் மாற்றிக் கொள்ள வேண்டும். படிப்பிற்கும் அறிவிற்கும் சம்பந்தம் கிடையாது. வெறும் மனப்பாடத்தால் கலெக்டர் நந்தக்குமாரை போன்றவர்களும், புரிந்து கொண்டு பாடம் படிப்பவர்கள் கலெக்டர் தரேஸ் அஹமது போன்றவர்களும் சமுதாயத்திற்கு கிடைப்பார்கள் என்பதை உணர வேண்டும்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!