Students on the road Blocked near Perambalur with their parents requesting water supply to the school!
பெரம்பலூர் அருகே உள்ள சத்திரமனை கிராமத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் போதுமான அளவு தண்ணீர் வினியோகம் செய்யாத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று மாணவர்கள் பெற்றோர்களுடன் பெரம்பலூர் – செட்டிக்குளம் சாலையில் அவ்வழியாக வந்த பேருந்துகளை வழிமறித்து சாலைமறியிலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தை உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.