Students who score at the state level on behalf of the State Government congratulatory certificate, prize money

பெரம்பலூர் மாவட்டத்தில் மார்ச் – ஏப்ரல் 2016-ல் நடைபெற்ற 10ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் தேர்வெழுதி வெற்றி பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் பள்ளி மாணவி இ.சவுந்தர்யா மற்றும் பெரம்பலூர் புனித ஜோசப் பள்ளி மாணவன் எஸ்.ஆர்.செல்வ கணேஷ் ஆகிய இருவருக்கும் பாராட்டுச் சான்றும், பரிசுத் தொகையாக தலா ரூ.20, ஆயிரமும்,

மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்த பெரம்பலூர் தந்தை ரோவர் மெட்ரிக் பள்ளி மாணவிகள் இ.செ.மிருணாளினி மற்றும் கே.லிஷா , இரா.நெ.ராஷ்மிபிரியா ஆகிய மூவருக்கும் பாராட்டுச் சான்றும், பரிசுக் தொகையாக தலா ரூ.15,ஆயிரமும் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் பாராட்டுச் சான்றிதழ்களையும், பரிசுத்தொகைக்கான காசோலைகளையும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் இன்று முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி வழங்கி கவுரவித்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!