Studying Ramayana: Demolition of Perumal temple: Minister Sivashankar held puja with Iyer in Dravida model regime!
பெரம்பலூரில், இன்று காலை நடந்தது. அரசு ஐடிஐக்கு கட்டிடம் கட்டுமான கட்டும் பணி தொடக்க விழா நடந்தது. அதற்கான அடிக்கல நாட்டு விழா தமிழ்நாடு அமைச்சர் சிவசங்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, அடிக்கல் நாட்டினார். ஆனால், அதற்கு முன்பாக, அப்பகுதியில் இருக்கும் ஐயர் ஒருவரை வைத்து சிறப்பு பூஜைகள் தீபாரதனைகள் செங்கற்களுக்கு காண்பிக்கப்பட்டது. பின்னர், அங்கிருந்து விழாக்குழுவினர் அனைவருக்கும், விபூதி, சந்தனம், குங்குமம் வழங்கப்பபட்டது.
இந்த நிகழச்ச்சியில், பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், எளம்பலூர், கே.சி.ஆர் குமார், செங்குணம் மற்றும் ஒப்பந்தாரர்கள், ஐடிஐ பணியாளர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திமுக அரசு சமீபத்தில் தான் திராவிடல் மாடல் பயிற்சி பட்டறைகளை பெரம்பலூர், குன்னம் உள்ளிட்ட தொகுதிகளில் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.