Sudden FSSAI Dept offical inspection: Rs 3.5 lakh worth of chocolate, ingredients confiscate goods!
பெரம்பலூர் மாவட்டத்தில் 75 கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் திடீரென ஆய்வு நடத்தியதில் , ரூ.3.5 லட்சம் மதிப்பிலான தரமற்ற சாக்லேட், காலாவதியான
இனிப்பு பாக்கெட்டுகள், தடை விதிக்கப்பட்ட பான்மசாலா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
பெரம்பலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் வெங்கடேசன் தலைமையில் உணவு பாதுகாப்புத் துறையை சேர்ந்த ஆய்வாளர்கள் சின்னமுத்து (பெரம்பலூர்), அழகுவேல் (வேப்பந்தட்டை ), ரவி (ஆலத்தூர்) ஆகியோர் தரம் இல்லாமல் விற்கப்படும் குழந்தைகளுக்கான மிட்டாய் பொருட்கள், இனிப்பு வகைகள் மற்றும்
தடைவிதிக்கப்பட்ட மசாலா பொருட்கள் விற்பனையை தடுக்கும்வகையில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பலூர் நகரில் கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் பள்ளிவாசல் தெரு, கடைவீதியில் உள்ள பெட்டிக் கடைகள், மிட்டாய்களை உணவு பாதுகாப்புத் துறையினர் இன்று
திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ரூ.1லட்சத்து 25ஆயிரம் மதிப்பிலான சீனா நாட்டில் தயாரிக்கப்பட்ட சாக்லேட்,
காலாவதியான மிட்டாய் பாக்கெட்டுகள், உற்பத்தி தேதி, காலாவதி தேதி, முகவாpயில்லாத மிட்டாய் பாக்கெட்டுகள், தடைவிதிக்கப்பட்ட பான்மசாலா பொருட்கள், குட்கா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கடந்த சிலதினங்களில் 75 கடைகளில் திடீர் ஆய்வு செய்து சுமார் ரூ.3 லட்சத்து 50ஆயிரம் மதிப்பில் தடைவிதிக்கப்பட்ட, உட்கொள்வதற்கு ஏற்பில்லாத, தரமற்ற உணவுபொருட்களை கைப்பற்றினர்ப்பட்டுள்ளது.
இவற்றில் சில உணவுப் பொருளின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும், தடைவிதிக்கப்பட்ட உணவுபொருட்கள், பான்மசாலா,குட்கா பாக்கெட்டுகள் அழிக்கப்படும் என்றும், பெரம்பலூர் நகரிலும். மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களிலும் பெட்டிக்கடைகள், தின்பண்டங்கள் விற்கப்படும் கடைகளில்
தரமற்ற பாக்கெட், காலாவதியான உணவுபொருட்கள், பான்மசாலா பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
எடுக்கப்படும் என்றும் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.