Summer Special Purity Camp on behalf of Namakkal Nehru Yugendra
நாமக்கல் நேரு யுவகேந்திரா சார்பில் கோடைக்கால சிறப்பு தூய்மை முகாம் நடைபெற்றது.
நேரு யுவகேந்திராவின் சிறப்பு திட்டமான பாரத பிரதமரின் திட்டமான தூய்மை இந்தியா திட்டத்தின் கோடைகால சிறப்பு தூய்மை முகாம் புதுச்சத்திரம் நாட்டா மங்கலம் பாரத் யுவ சக்தி அபியான்சார்பில் வாங்க கைகழுவுலாம் என்ற நிகழ்ச்சி குட்டமூக்கன்பட்டியில் நடைபெற்றது.
பாரத் யுவ சக்தி அபியான் செயலாளர் அருள் குமார் வரவேற்றார். முகாமிற்கு பாரத் யுவ சக்தி அபியான் தலைவர் ராஜசேகர் தலைமை வகித்து பேசியதாவது:
கிராம மக்கள் உடலை நோய் அணுகாமல் தடுக்கும் சில வழிமுறைகளை கடை பிடித்தாலே, ஆரோக்கியமான வாழ்வைப் பெறலாம்.
அதற்கான வழிமுறைகளில், மிக முக்கியமானது, நம் கைகளை சுத்தப்படுத்துவது. கைகளை கழுவுவதாலேயே, பெரும்பாலான நோய்கள் வருவதை தடுக்கலாம். காரணம், காற்றின் மூலமும் நீரின் மூலமும், மற்றப் பொருட்களை தொடுவதன் மூலமும் பரவும் நோய்கள் ஏராளம்.
கை கழுவும் முறையை சரியாகப் பின்பற்றாமல், பல நோய்களுக்கு ஆட்பட்டு அவதியுறுவது, வளரும் நாடுகள் தான். நம் இந்தியா போன்ற ஆசிய நாடுகள், உணவை கைகளால் எடுத்து உண்ணும் வழக்கம் கொண்டுள்ளது.
இந்தியாவில், கைகளை ஒழுங்காகக் கழுவாமல் சாப்பிடுவதால் உண்டாகும், வயிற்றுப்போக்கு நோயால் வருடத்திற்கு 5 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.
குழந்தைகள் மணலில் விளையாடும் போதும், மலம் கழித்துவிட்டு வரும் போதும், கை கால்களில் பாக்டீரியாக்கள் ஒட்டிக்கொள்கின்றன.இவற்றை சரியான முறையில் கை, கால்களை சுத்தம் செய்வதால் மட்டுமே, அழிக்க முடியும் என பேசினார்.
சுகாதார கல்வியாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர். இந்நிகழ்ச்சியில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கைகழுவு முறை குறித்து செய்முறை விளக்கம் மற்றும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
சுகாதாரம் குறித்து பொது மக்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். முடிவில் பேபி நன்றிகூறினார்.