Summer training courses at Namakkal district center library
மாவட்ட மைய நூலகத்தில் கோடைகால பயிற்சி வகுப்பு நாமக்கல் மாவட்ட மைய நூலகத்தில், மாணவ, மாணவிகளுக்கான கோடைகால பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது.
நாமக்கல் கோட்டை ரோட்டில் செயல்பட்டு வரும் மாவட்ட மைய நூலகத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு, மாணவ, மாணவிகளுக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
பயிற்சி வகுப்புகள் துவக்க விழாவிற்கு மாவட்ட நூலக அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். விரைவாக வாசிப்பதற்கான பயிற்சி, கையெழுத்துப் பயிற்சி, செஸ் பயிற்சியும் ஆகியவை வழப்பட்டன.
வருகிற 19 ஆம் தேதி நினைவாற்றல் பயிற்சி, 20 ஆம் தேதி யோகா வகுப்பு, 26 ஆம் தேதி ஓவியப் பயிற்சி, 27 தேதி குழந்தைகளுக்கு கதை சொல்லுதல் பயிற்சி போன்றவை நடைபெறுகிறது. கோடைகால பயிற்சி வகுப்புகளுக்கு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்கலாம்.
பயிற்சி முடிவில் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை வாசகர் வட்ட தலைவர் ஜோதிலிங்கம், இரண்டாம் நிலை நூலகர் வேல்முருகன் ஆகியோர் செய்துள்ளனர்.