Summer water pandhal on behalf of the AIADMK in Perambalur
பெரம்பலூர் அதிமுக சார்பில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் கோடை கால தொடங்கி உள்ள நிலையில் கடும் தண்ணீர் தாகத்தால் அவதிப்படும் மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே எம்.ஜி.ஆர் சிலை அருகே தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது. அதனை முன்னாள் துணை சபாநயாகர் வரகூர் அருணாசலம் திறந்து வைத்தார்.
மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.டி. இராமச்சந்திரன் மற்றும் பெரம்பலூர் எம்.எல்.ஏ. இரா.தமிழ்ச்செல்வன், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசி, ஒன்றிய செயலாளர்கள் வேப்பந்தட்டை என்.சிவப்பிரகாசம், ஆலத்தூர் என்.கே. கர்ணன், மற்றும் மகளிர் அணியினர், தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தண்ணீர் பந்தலில், நீர், மோர், தர்பூசணிப் பழம் ஆகியவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.