Taekwondo team won the state-level Republic Day meeting with the district collector

தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் 25.01.2017 முதல் 27.01.2017 வரை விழுப்புரத்தில் உள்ள அரசூர் வி.ஆர்.எஸ். பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற மாநில குடியரசு தின விழாப் போட்டிகளில் 19,17, 14 வயதிற்குட்பட்ட பிரிவில் பெரம்பலூர் விளையாட்டு விடுதி டேக்வாண்டோ விளையாட்டு மாணவிகள் தங்கம் 1, வெள்ளி 3, வெண்கலம் 3 உட்பட்ட மொத்தம் 7 பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர். அவர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத் தொகையாக ரூ. 1200, ரூ.750, ரூ.500 மதிப்பிலான காசோலைகளையும் தமிழக அரசு வழங்கியுள்ளளது.

மாநில அளிவல் குடியரசு தின விழாப் போட்டிகள் என்பது முதலில் அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கிடையே மண்டல அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றிபெற்ற வீரர் – வீராங்கனைகளுக்கு மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்படும்.

அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்ட மாணவியர் விடுதி வீராங்கனைகள் கடந்த நவம்பர் மாதம் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்ற மண்டல அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்று பிறகு மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டனர். இதில் பெண்கள் பிரிவிற்கு நடத்தப்பட்ட போட்டிகளில் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு பெண்கள் விடுதி வீராங்கனைகள் கலந்துகொண்டு மாநில அளவில் 1 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் வென்றுள்ளனர். மேலும், இப்போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற 7 வீராங்கனைகளும் பெரம்பலூர் அரசுமேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர்.

மேலும், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி 17.01.2017 முதல் 19.01.2017 வரை சென்னையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பல்நோக்கு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற மாநில அளவிலான கேலோ இந்தியா டேக்வாண்டோ விளையாட்டுப் போட்டியில் 41 கி.கி எடை உட்பட்டோர் பிரிவில் பெரம்பலூர் விளையாட்டு விடுதி மாணவி இ. சிந்துஜா தங்கப்பதக்கம் வென்று தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் தமிழக அணி சார்பாக கலந்து கொண்டார்.

விளையாட்டு விடுதியில் டேக்வாண்டோ விளையாட்டு ஆரம்பித்த இந்த ஆண்டே மாணவி தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்றுள்ளார். வெற்றி பெற்ற வீராங்கனைகள் தாங்கள் பெற்ற பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் நந்தகுமாரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். அப்போது பேசிய மாவட்ட ஆட்சி

இந்நிகழ்வின்போது மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ம. இராமசுப்பிரமணியராஜா மற்றும் டேக்வாண்டோ பயிற்றுநர் ந. தர்மராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!