#Tamil Nadu Farmers’ Association is calling on the Union to declare drought alathur resolution Special Council meeting
வறட்சி ஒன்றியமாக ஆலத்தூரை அறிவித்து நிவாரணம் வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்க சிறப்பு பேரவை கூட்டத்தில் தீர்மானம்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பேரவைக் கூட்டம் ஆலத்தூர் கேட் பகுதியில் செயலாளர் மு.ப. அண்ணாதுரை தலைமையில் கூட்டம் நடந்தது.
பச்சையா, ஜெயலட்சுமி, கதிர்வேலு, செங்கமலை, முத்து, சுப்பிரமணி, ரா. சண்முகம், மகாலிங்கம், ஆகியோர் முன்னழலை வகித்தனர். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் என்.செல்லதுரை, டைஃபி மாவட்ட செயலாளர் எஸ்.பி.டி ராஜாங்கம், கரும்பு விவசாயிகள் சங்த மாவட்டத் தலைவர் ஏ.கே.இராஜேந்திரன், கரும்பு விவசாயிகள் சங்த மாவட்ட செயலாளர் ஏ.அன்பழகன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். . கூட்டத்தில் ஆலத்தூர் பகுதிக்கு, நடசேன் தலைவராகவும், மு.ப. அண்ணாதுரை செயலாளராகவும், தங்கராசு மற்றும் பெரிசாமி ஆகியோர் துணைத்தலைவர்களாகவும், பச்சையா, மற்றும் ஜெயலட்சுமி துணைச் செயலாளராகவும், தேர்வு செய்யப்பட்டனர். ராஜேஷ் நன்றி தெரிவித்தார். முன்னதாக வறட்சியான ஒன்றியமாக ஆலத்தூரை அறிவித்து நிவாரணம் அனைத்து பயிர்களுக்கும் அரசு உரிய இழப்பீடு வழங்க கோரி சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.