Tamil Nadu governor who wasted taxes and human labor for private college

பெரம்பலூரில் இன்று தமிழக ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளால், எந்த வித பயனும் ஏற்படவில்லை, மாறாக காவல் துறை, நகராட்சி துப்புறவு பணியாளர்கள், அரசின் பல்வேறு துறைகளின் மனித உழைப்பும், மக்களின் வரிப்பணமும் பாழாய் போனது.

பெரம்பலூர் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான மருத்துவக்கல்லூரியில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், தமிழ்நாடு கவர்னர் பன்வாரிலால் கலந்து கொண்டார். ஆனால், தனியார் கல்லூரிக்கு வருவதை மக்கள் மறக்கும் விதமாக அரசு சார்பில் பல்வேறு செட்-அப் நிகழ்ச்சிகள் செய்யப்பட்டு இருந்தது. இது அனைத்தும் மக்களின் ஒரு பக்கம் ஏமாற்றும் விதமாகவும், மற்றொரு பக்கம் நகைச்சுவையாக இருந்தது.

கவர்னர் வருகையை முன்னிட்டு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் முன்கூட்டியே திட்டமிட்டு தூய்மைப் செய்யப்படாமல் விடப்பட்டிருந்தது. மேலும், சாக்கடை துர்நாற்றம் பெரம்பலூர் பேருந்து நிலையம் முழுவதும் வீசியது, மேலும், பாதுகாப்பிற்கு வந்திருந்த பிற மாவட்ட போலீசார் சகித்து கொண்டு வேலை பார்த்தனர்.

மேலும், இதே போன்று, செங்குணம் அரசுப்பள்ளியிலும், முன்கூட்டியே திட்டமிடப்பட்டு நாடகம் போல் நடத்தப்பட்டது. இது மட்டும் அல்லாமல் கவர்னரின் வருகைக்கான நோக்கம் தனியார் கல்லூரிக்கு மட்டுமே சாதகமாகி போனது.

உழைத்து களைத்து, உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, இருக்க இடமின்றி இந்த நாட்டில் ஆயிரமாயிரம் மக்கள் கடும் சிரமப்படுகின்றனர்.அவர்கள் வாங்கும் பொருட்களுக்கான விற்பனை வரி, வீட்டு வரி, தொழில் வரி என பல்வேறு விதமான வரிகளை வியர்வை பணமாக்கி செலுத்துகின்றனர்.

ஆனால், அரசியல்வாதிகள், அதிகாரிகள் இவற்றை பொருட்படுத்துவதே இல்லை. தனியார்கள் வளர்ச்சிக்கு ஆர்வம் காட்டும் அரசுகள், சாமானிய மக்களின் வளர்ச்சிக்கு போதிய ஆர்வம் காட்டுவதில்லை.

இன்று கவர்னருக்காக நடத்தப்பட்ட நாடக காட்சிகளை சில தினங்களுக்கு பின்னர் வந்து பார்த்தாலே புரியும், உதாரணத்திற்கு பெரம்பலூர் நகராட்சி பணியாளர்களுக்கு இன்று கையுறை , முகவுரை, உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இருந்தன. நேற்று இருந்ததா என்றால் இல்லை.

பெரும்பாலான அதிகாரிகள், அரசியல்வாதிகள் போட்டோவுக்கு போஸ் கொடுத்து விளம்பரப்படுத்தி கொண்டாலே போதும், அதோடு முடிந்து விட்டது என நினைக்கிறார்கள். அதே வரிசையில் கவர்னரும் இடம் பெற்றுள்ளார்.

இன்று பெரம்பலூருக்கு கவர்னர் வந்ததால் பெரிய அளவிலான எந்தப் பயனும் இல்லை. தூய்மை இந்தியா திட்டம் பெயர் அளவிலேயே இருக்கிறது. அதற்கான வரியும் வசூலிக்கப்படுகிறது.

ஆனால், இந்திய அரசியலமைப்பு சட்டப்படி மக்களுக்கான சேவை செய்து தர அரசு இன்னும் முனைப்பு காட்ட வேண்டும்.

அனைத்து கல்லூரிகளுக்கும் கவர்னர்தான் வேந்தர் (Chancellor). இன்று தனியார் கல்லூரிக்கு வேந்தராக வந்த கவர்னர், வளர்ச்சியில் பின்தங்கியுள்ள மாவட்டங்களில் உள்ள அரசு கல்லூரி பட்டமளிப்பு விழாவில், ஆர்வமுடன் கலந்து கொண்டால் கவர்னரை பாராட்டலாம். வரும் பட்டமளிப்பு நாட்களில் பார்ப்போம்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!