Tamilnadu Transport Minister Sivasankar inaugurated the new buildings worth Rs. 33.87 lakhs for public use.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம், அணைப்பாடி கிராமத்தில் ரூ.8.70 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், அயினாபுரத்தில் ரூ.15.27 லட்சம் மதிப்பில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு புதியதாக கட்டப்பட்டுள்ள கூட்டுறவு சங்க கட்டடம், ரூ.9.90 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மைய கட்டடம் என மொத்தம் ரூ.33.87 லட்சம் மதிப்பீட்டிலான 3 புதிய கட்டடங்களை தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
விளம்பரம்:
முன்னதாக, பாலம்பாடி, ஜெமீன் ஆத்தூர், ராமலிங்கபுரம், ரசுலாபுரம், மாக்காய்குளம், அருணகிரிமங்கலம், திம்மூர், மேத்தால், காரைப்பாடி, சில்லக்குடி ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற அவர், தேர்தலில் வெற்றி பெற்றதற்கு நன்றியும் தெரிவித்தார். கோரிக்கை மனுக்களுக்கு மிக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களுக்கு உத்தரவாதம் அளித்தார்.
ஆலத்தூர் யூனியன் சேர்மன் என்.கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ துரைசாமி, கொளக்காநத்தம் ஊராட்சித் தலைவர் ராகவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விளம்பரம்: