பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி நகர், சமத்துவபுரம் பகுதிகள் உள்ளது. அங்கு இரண்டு குடிநீர் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள் உள்ளன.

அதில் கலங்கலான, துர்நாற்றம் வீசுவதாகவும், போதுமான அளவு குடிநீர் வினியோகம் செய்வதில்லை எனக் கூறி அப்பகுதிய மக்கள் இன்று பெரம்பலூர் புறவழிச் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த வருவாய், ஊரக வளர்ச்சி மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஆலயமணி விசாரணை நடத்தியன் பேரில் அப்பகுதிக்கு டேங் ஆப்ரேட்டர் மூர்த்தி (வயது 45 ) என்பவர் முழுமையாக டேங்கை பராமரிக்காகமலும், சீரான தண்ணீர் வினியோம் செய்யாமலும் இருப்பது தெரிய வந்தது. இதனால் மூர்த்தியை, வட்டார வளர்ச்சி அலுவலர் ஆலயமணி ஆட்சியர் உத்திரவின் பேரில் தற்காலிக பணி நீக்கம் செய்து உத்திரவிட்டார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!