Tanker truck accident near Perambalur: car caught fire; Two killed: Two injured!

சென்னை குரோம்பேட்டை பகுதியில் உள்ள அஸ்தினாபுரம் பகுதியைச் சேர்ந்த குமார் (40), தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது 14 வயது மகள் தன்யஸ்ரீ மற்றும் சகோதரர் வெங்கட வரதனுடன் (38), வாடகை கார் புக் செய்து பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊரான திருச்சி மாவட்டம் குளத்தூர் கிராமத்திற்கு, சென்று கொண்டிருந்தார்.

நேற்று இரவு 10 மணிக்கு புறப்பட்ட கார் பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூர் ஆஞ்சநேயர் கோவில் என்ற இடத்தில் இன்று அதிகாலை 04.00 மணியளவில் சென்று கொண்டிருந்தது, அப்போது, திடீரென சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு டேங்கர் லாரி ஒன்று தார் ஏற்றி சென்றது. அதன் டிரைவர் பாடாலூர் ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள டீக்கடையில் டீ குடித்து விட்டு, பின்னால் வரும் வாகனங்களை கவனிக்காமல், தேசிய நெடுஞ்சாலையில் வாகனத்தை செலுத்தினார். இதனால், நிலைக்குழைந்த கார் டேங்கர் லாரி மீது மோதியது.

இதில் காரும் டேங்கர் லாரியும் தீப்பற்றி எரிய தொடங்கியது. காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என காரில் இருந்தவர்களின் அபயக் குரல் கேட்டு அங்கிருந்தவர்கள் சம்பவத்திற்கு ஓடிச்சென்று காருக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தன்யாஸ்ரீ(14), மற்றும் கார் டிரைவரான கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே உள்ள பெரியம்மாபட்டு கிராமத்தை சேர்ந்த விஸ்வநாத்(27) ஆகியோரையும், உயிரிழந்த சகோதரர்களான குமார் மற்றும் வெங்கடவரதன் ஆகியோரை மீட்டு சாலையோரம் கிடத்தினார். இதனைத்தொடர்ந்து படுகாயமடைந்த தன்யஸ்ரீயும், டிரைவர் விஸ்வநாத்தும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த திடீர் தீ விபத்தால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பெரம்பலூர் தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்.


இது குறித்து தகவலறிந்த போலீசார் டிஎஸ்பி., சஞ்சீவ்குமார் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாடாலூர் போலீசார், சடலத்தை உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

விபத்துக்கு காரணமான டேங்கர் லாரி டிரைவரான செங்கல்பட்டு மாவட்டம், பின்னகண்டை கிராமத்தை சேர்ந்த குமார்(39), என்பவரை கைது செய்ததுடன் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி ஓட்டுனரின் கவனக்குறைவால், இன்று 2 பேர் விபத்தில் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. லாரி ஓட்டுனர்களின் கவனக்குறைவு காரணமாகவே அதிக விபத்துகள் ஏற்படுவதுடன், இலகு ரக வாகனங்களில் பயணிப்பவர்களின் அதிகமாக உயிரிழக்கின்றனர். லாரி ஓட்டுனர்கள் மிக கவனமுடன் வாகனங்னளை இயக்க போலீசார் அறிவுறுத்துவதுடன் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்துகளால் பல குடும்பங்கள் நிர்கதியாக நிர்க்கின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!