Teacher Eligibility Test Examination 2012, 2013, 2014 (Paper 2) those who have passed from the website of the merit list released

பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி விடுத்துள்ள தகவல் :

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிக் கல்வி துறையில் 286 பட்டதாரி ஆசிரியர்கள், பின்னடைவுப் பணியிடங்கள் 623 மற்றும் அனைவருக்கும் இடை நிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் 202 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தகுதித்தேர்வு 2012, 2013 மற்றும் சிறப்பு ஆசிhpயர் தகுதித் தேர்வு 2014ல் நடைபெற்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற்று தகுதி பெற்றுள்ள நாடுநர்களைக் கொண்டு நிரப்பப்படவுள்ளன.

இந்நிலையில் (i) ஏற்கனவே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் தற்போது கூடுதலாக வேறு இளங்கலை பட்டம் பெற்றவர்கள்

(ii) ஏற்கனவே தேர்ச்சி பெற்று சரிபார்ப்புக்கு வருகை தராதவர்கள் (iii) பி.எட்., பயின்ற ஆண்டே ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி அந்த கல்வியாண்டே பி.எட்., தோச்சி பெற்றவர்கள் மற்றும் (1ஏ) சான்றிதழ் சரிபார்ப்பின் போது பணித்தெரிவுக்கு உரிய தகுதி பெறாமல் தற்போது தகுதி பெற்றவர்கள் ஆகியோர்கள், மீளவும் வாய்ப்பு வழங்க வேண்டி விண்ணப்பித்துள்ளார்கள்.

எனவே, ஆசிhpயர் தகுதித் தேர்வு 2012, 2013 மற்றும் சிறப்பு ஆசிhpயர் தகுதித் தேர்வு 2014ல் (தாள் 2)ல் தேர்ச்சி பெற்றவர்களின் தகுதிப்பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் www.trb.tn.nic.in 10.03.2017, அன்று வெளியிடப்படவுள்ளது.

நாடுநர்கள் மேற்கண்ட விவரங்களை இணையதள வழி மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம். ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் – 2 பதிவு எண் மற்றும் பிறந்த நாள் விவரம் பதிந்து விவரங்கள் அறியலாம். பதிவெண் நினைவில் கொள்ளாதவர்கள் பெயர் மற்றும் பிறந்த நாள் விவரம் பதிந்து விவரங்கள் அறியலாம்.

மேற்கண்ட நாடுநர்கள் தங்களின் விவரங்களை ஆசிரியர் தோவு வாரிய இணையதளம் மூலம் சரிபார்த்துக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. நாடுநர்கள் தங்களின் ஒரு சில விவரங்களை திருத்தம் மேம்படுத்த வேண்டும் எனில் ஆன்லைனிலேயே மேற்கொள்ளலாம். நாடுநர்கள் தங்களின் அசல் ஆவணங்களைக் கொண்டு விவரங்களை மீள சரிபார்த்து புகைப்படம் மற்றும் கையொப்பமிட்டு உறுதிச் சான்றினை தரவேண்டும்.

மேற்கண்ட விவரங்களை 10.03.2017 காலை 10.00 மணி முதல் 20.03.2017 இரவு 10.00 மணிவரை இணையதளத்தில் சரிபார்த்து, திருத்தம் தேவை எனில் ஆன்லைனில் மேற்கொள்ளலாம். இணையதளம் மூலமாகவோ திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். நேரடியாகவோ, எழுத்து மூலமாகவோ பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. எக்காரணம் கொண்டும் மீளவும் இதுபோன்று வாய்ப்புகள் வழங்கப்படமாட்டாது. கால நீட்டிப்பும் செய்யப்படமாட்டாது. ‘

மேற்கண்டவாறு சரிபார்க்கப்பட்ட விவரங்களைக் கொண்டு இறுதி தகுதிப்பட்டியல் (Final Merit List) தயார் செய்யப்பட்டு, தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!