Teenager hacked to death near Perambalur! The police are seriously investigating!!
பெரம்பலூர் அருகே மர்ம நபர்களால், வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் பகுதியை சேர்ந்தவர் பழனி மகன் கமலஹாசன் (35). இவர் பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில் வீடு வாடகைக்கு எடுத்து, அவரது மனைவி மஞ்சுளா (24) உடன் தங்கி, அருகே விஜயகோபாலபுரத்தில் இயங்கி வரும் தனியார் டயர் தொழிற்சாலையில், 3 1/2 வருடங்களாக ஒப்பந்த ஊழியராக பணி செய்து வந்தார். நேற்றிரவு வேலைக்கு சென்ற கமலஹாசன், வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால், அவரது மனைவி மஞ்சுளா சந்தேகமடைந்து அவருடன் உடன் வேலை செய்யும் அருண் என்பவரை செல்போனில் தொடர்பு கொண்ட போது, அவரை இரவு 11.30 மணிக்கே சிறுவாச்சூரில் இறக்கி விட்டு சென்றதாகவும், பிறகு அக்கம் பக்கம் தேடியும் கிடைக்கவில்லை, என தெரிவித்துவிட்டு சென்றுவிட்டார்.
இந்நிலையில், நேற்றிரவு புதுநடுவலூரில் உள்ள மாரியம்மன் கோவில் முன்பு, அடையாளம் தெரியாத ஆண் வாலிபர் தலையில் வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடப்பதாக, கிராம உதவியாளர் சுந்தரராஜன் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு பெரம்பலூர் போலீசார் சென்று நடத்திய விசாரணையில் இறந்தது கமலஹாசன் தான் என்பது உறுதியானது. சடலத்தை கைப்பற்றிய போலீசார் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர்.
வாலிபர் கொலைக்காண காரணம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.