Temporary accommodation for college students in Veppur, near Perambalur

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூரில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் கல்லூரி மாணவிகளுக்கான தற்காலிக விடுதியை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

பின்தங்கிய மாவட்டமான பெரம்பலூர் மாவட்டத்தில், வேப்பூரில் இயங்கி வரும், தமிழக அரசின் பாரதிதாசன் பல்கலைக்கழக பெண்கள் உறுப்புக்கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் பயிலும், மாணவிகள் 40 கி.மீ தொலைவில் இருந்தும், 2 வழித்தடங்களில் பேருந்துக்காக சிரமப்பட்டும், பேருந்துகள் மாறி வந்தும் கல்லூரி வந்தடைகின்றனர்.

இக்கல்லூரியில் பயிலும் மகளிருக்கென்று பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் விடுதியை வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதனடிப்படையில் ஊரகவளச்சி முகமையின் சார்பில் வேப்பூரில் உள்ள சேவை மையக்கட்டடத்தை தற்காலிகமாக மகளிர் விடுதியாக பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் அனுமதியளித்தார். இன்று காலை சுமார் 11 மணிக்கு மேல், குன்னம் சட்ட மன்ற உறுப்பபினர் ஆர்.டி.ராமச்சந்திரன் முன்னிலையில், திறந்து வைத்தார். பொதுமக்கள், கல்லூரி மாணவிகள், அரசு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!